தமிழகத்தில் மூத்த அரசியல்வாதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியியின் தலைவருமான தா. பாண்டியன் உடல்நலகுறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் காலமானார்.
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் அனைவரும் தா. பாண்டியன் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார் என தங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் காமெடி நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது! எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர்!! மேலும், யாரிடமும் அதை தாப்பா இதை தாப்பா என்று கேட்காத தா.பா. அவர்தான் தா.பாண்டியன் ஐயா! எனத் தெரிவித்துள்ளார்.
எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது! எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர்!!