மூன்றாவது முறையாக கார்த்தி படத்தில் இணைந்த ராஜ்கிரண்!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (09:33 IST)
கார்த்தி இப்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் முதலில் ஜப்பான் படமும், அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கும் படமும் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இதில் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் சில பேண்டசி அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ளதாகவும், அவருக்குள் எம் ஜி ஆர் வந்துவிடுவது போன்ற சில பேண்டசி அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாம்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரண் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு ராஜ்கிரண் கார்த்தியின் கொம்பன் மற்றும் விருமன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்