ரூ.4,276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: ஜப்பான் நிதியுதவி

திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (12:07 IST)
ரூபாய் 4276.44 கோடியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரூர் என்ற பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்ற நிலையில் இந்த நிலையத்திற்கு இன்று முதல் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  
 
ரூபாய் 4,276.44 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் தினசரி 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
ஜப்பான் கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் இந்த கடல் நீரை குடிநீர் ஆக்கும் நிலையம் அமைக்கப்பட்ட உள்ளதாகவும் இந்த திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு விட்டால் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சே இருக்காது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்