ஒரு காலத்தில் தன்னிடம் வேலைபார்த்தவர்களுக்கு இன்றும் சம்பளம் வழங்கும் நடிகர்!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (16:23 IST)
நடிகர் நெப்பொலியன் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர். இப்போது அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார்.

நடிகர் நெப்போலியன் தனது மகனின் உடல்நிலைக்காக இப்போது அமெரிக்காவில் தங்கி வருகிறார். இதனால் அவர் தனக்கு வந்த பல வாய்ப்புகளை இழந்துள்ளார். ஆனால் அங்கு சென்று இதுவரை நான்கு ஹாலிவுட் படங்களில் நடித்துமுடித்துள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவுடன் இருக்கும் தொடர்பு விடுபட்டு போய்விட கூடாது என்பதற்காக ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் தமிழில் நடிக்கிறார். அப்படி கடந்த ஆண்டு அவர் கார்த்தி நடிக்கும் சுல்தான் மற்றும் சமீபத்தில் அன்பறிவு ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அவ்வப்போது தமிழ் படங்களில் நடிப்பதற்காக தமிழ்நாடு வரும் அவர், தனக்கு நெருக்கமானவர்களை சந்தித்து வருகிறாராம். அவர் நடிகராக இருந்த போது தன்னிடம் வேலைப் பார்த்தவர்களுக்கு இன்னமும் சம்பளம் வழங்கிக் கொண்டு இருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்