நடிகர் நெடுமுடிவேணு காலமானார்: திரையுலகினர் அஞ்சலி!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (14:14 IST)
நடிகர் நெடுமுடிவேணு காலமானார்: திரையுலகினர் அஞ்சலி!
பழம்பெரும் மலையாள நடிகர் நெடுமுடி வேணு சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி காரணமாக தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடிகர் நெடுமுடி வேணு சற்று முன்னர் திடீரென காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழம்பெரும் நடிகர் நெடுமுடி வேணு ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பதும் 3 முறை தேசிய விருதுகளும் ஆறு முறை கேரள அரசின் சிறந்த நடிகர் விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்