அஜித் செல்லமாக கெட்டவார்த்தை பேசுவார்… பீர் வாங்கிக் கொடுப்பார் – ரகசியம் பகிர்ந்த நடிகர்!

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (15:49 IST)
நடிகர் மற்றும் இயக்குனரான மாரிமுத்து அஜித் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

தமிழில் இருக்கும் திறமையான குணச்சித்திர நடிகர்களில் மாரிமுத்துவும் ஒருவர். பரியேறும் பெருமாள் படத்தில் நடிகை கயல் ஆனந்தியின் தந்தையாக அவர் நடித்திருந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இது தவிர, கொம்பன், பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

சிறந்த நடிகராக அறியப்பட்ட இவரின் மற்றொரு முகம் யாரும் அறியாதது. இவர் அடிப்படையில் ஒரு இயக்குனர் பிரசன்னா நடிப்பில் உருவான கண்ணும் கண்ணும் படம் மற்றும் விமல் பிரசன்னா நடிப்பில் உருவான புலிவால் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார். ஆனால் அந்த படங்கள் வெற்றி பெறாததால் நடிப்பில் முழு மூச்சாக இறங்கிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த நேர்காணல் ஒன்றில் அஜித் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ‘அஜித் படப்பிடிப்பு தளத்தில் செல்லமாக திட்டுவது போல கெட்டவார்த்தை பேசுவார். அதே போல எங்கள் எல்லோருக்கும் பீர் வாங்கிக் கொடுப்பார். நாங்கள் எல்லோரும் படப்பிடிப்பு முடிந்ததும் ஒன்றாக அமர்ந்து பீர் குடிப்போம்’ எனப் பல ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்