ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

vinoth
ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (10:50 IST)
தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் கலக்கியவர் லிவிங்ஸ்டன். இவர் ஒரு இயக்குனர் மற்றும் கதாசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என இரு மகள்கள் உள்ளனர்.  இதில் ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

தற்போது திரைப்படங்களில் நடிகராக மட்டும் கவனம் செலுத்தி வரும் லிவிங்ஸ்டன், தன் மகள் ஜோவிதாவை கதாநாயகி ஆக்கி விரைவில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தற்காலத்தைய திருமண உறவுகள் பற்றி பேசியுள்ளார்.

அதில் ‘இந்த காலத்தில் ஒருத்தர் கூடவே வாழணும்னு எந்த கட்டாயமும் இல்லை.  ஒருத்தர பிடிக்கலன்னா விட்டுட்டு போயிட்டே இருக்கணும். நாம் சமூகத்தைப் பத்தியெல்லாம் கவலைப்படக் கூடாது. இந்த சமூகம் வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும். நிறைய கனவுகளோடு திருமணம் செய்கிறார்கள். அதில் ஒருத்தருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை என்றால் ஏன் அவங்க சேந்து வாழனும்.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்