5 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி -ஐந்து மொழிகளில் தயாராகும் ஜீவனின் "பாம்பாட்டம்"

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (10:55 IST)
தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘யூனிவர்சிட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜீவன். அதன் பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அந்த படம் அவரது திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக  அமைந்திருந்தது. அதையடுத்து திருட்டு பயலே, நான் அவன் இல்லை போன்ற படங்கள் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்று தந்தது. 
 
பின்னர் தொடர்ந்து நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்த ஜீவன் அதன் பின்னர் ஹீரோவாக நடித்த மச்சக்காரன் படத்தில் நடித்து தோல்வியை சந்தித்தார். பின்னர் சினிமாவில் சில ஆண்டுகளாக வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் தற்ப்போது V.C. வடிவுடையான் இயக்கத்தில்  பாம்பாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
V.பழனிவேல் தயாரிக்கும் இப்படம் வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக   தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாராகிறது.  ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில்  இம் மாதம் நடைபெற உள்ளது என படக்குழு கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்