சிறைக்குச் சென்று திலீப்புக்கு ஓணம் பரிசு கொடுத்த ஜெயராம்

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (16:12 IST)
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் திலீப்பைச் சந்தித்து ஓணம் பரிசு கொடுத்துள்ளார் ஜெயராம். 


 

 
முன்னணி நடிகை கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கிறார் மலையாள நடிகர் திலீப். 3 முறை ஜாமீன் மனு கொடுத்தும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் ஜெயராம் சிறைக்குச் சென்று திலீப்பைச் சந்தித்துள்ளார். 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
 
“திலீப் என் நெருங்கிய நண்பர். ஒவ்வொரு ஓணத்துக்கும் அவருக்கு புத்தாடை பரிசளிப்பது என் வழக்கம். அதைக் கொடுக்கவே இங்கு வந்தேன். வழக்கு பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. ஆண்டவன் அருளால் அவர் மீண்டு வருவார்” எனத் தெரிவித்துள்ளார் ஜெயராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்