சினிமாவைவிட அரசியல் முக்கியம் - விஜய் சேதுபதி

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (16:04 IST)
‘சினிமாவைவிட அரசியல் தான் முக்கியம்’ என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

 
 
நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட அனிதாவிற்காக, தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் இருக்கக் கூடிய எல்லா இடங்களிலும் கண்டனக் கூட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
 
சென்னை லயோலா கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீலம் அமைப்பு சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி, “தற்போதைக்கு சினிமாவைவிட அரசியலே முக்கியம். அடுத்த தலைமுறை, அரசியலைப் புரிந்துகொள்ள நிறைய முயற்சி செய்ய வேண்டும். சாதியால் நாம் பிளவுபட்டுக் கிடக்கிறோம். அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என்று பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்