’’முதல் முறையாக மக்கள் பணி’’ உதயநிதிக்கு வாழ்த்துகள் தெரிவித்த நடிகர் தனுஷ் !

Webdunia
திங்கள், 3 மே 2021 (20:50 IST)
10 அண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் அக்கட்சியில் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதிக்கு தனுஷ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட்ட ஸ்டாலின் மகன் உதயநிதி 1 லட்சத்திற்கும் அதிகமான  வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து அவருக்கு பல தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் உதயநிதிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: முதல் முறையாக மக்கள் பணிசெய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் திரு.@Udhaystalin  அவர்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்  எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்