சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வீட்டில் முடங்கியிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸை தொற்றிலிருந்து ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருந்து வருகின்றனர்.
மனிதர்கள் நடமாட்டம் இல்லாததால் விலங்குகள், குருவி , காகம் , உள்ளிட்டவை பசியில் தவிக்கிறது. இதனை அறிந்த பிரபல கன்னட நடிகரான சந்தன் குமார் நந்தி மலையில் பசியில் பரிதவித்த 500க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு, வாழைப்பழம் ,தர்பூசணி , கிர்ணி பழம் உள்ளிட்ட பழவகைகளை வண்டியில் கொண்டு சென்று குரங்குகளுக்கு கொடுத்துள்ளார். சுமார் 4 மணிநேரம் தொடர்ந்து உணவளித்த சந்தனிடம் குரங்குகள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு விட்டு பழங்களை வாங்கி சாப்பிட்டதாகவும் அந்த குரங்கிடம் இருந்து அவர் சோஷியல் டிஸ்டன்ஸை கற்றுக்கொண்டதாவும் கூறியுள்ளார். நடிகரின் இந்த செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.