நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூரி குடும்பத்தின் அலப்பறை... இப்போ என்ன பண்ணிருக்காங்க பாருங்க!

சனி, 4 ஏப்ரல் 2020 (08:24 IST)
தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.

பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.  இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூரி கடந்த சில தினங்களாகவே தன் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு சமைப்பது, குளிப்பாட்டுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டிருந்தார். தற்போது அவரது செல்ல குழந்தைகள் அவருக்கு மேக்கப் போட்டுவிட்டு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளுடன் குழந்தைகளாகவே மாறுங்கள் என கூறி அட்வைஸ் கொடுத்துள்ளார்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#corona #lockdown #stayhome #staysafe #stayhealthy

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்