லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் பிரபல நடிகர்?

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (09:03 IST)
பூவிழி வாசலிலே படத்தில் கடலை கொறித்தபடி, அந்தச் சின்னப் பையனையும், நம்மையும் பயப்பட வைத்த நடிகர் பாபு ஆண்டனிக்கு அறிமுகம் தேவையில்லை. அதுபோல சூரியன் படத்திலும் அவரின் வில்லன் நடிப்பு பேசப்பட்ட ஒன்றாக அமைந்தது. இப்போது மலையாள படங்களில் மட்டும் நடித்து வரும் இவர், 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் வில்லன் நடிகர்களில் ஒருவர்.

2000க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக தலைகாட்டாத இவர் மலையாள படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இப்போது இவர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து லோகேஷ் அடுத்து ரஜினியை வைத்து இயக்க உள்ள திரைப்படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதை சமீபத்தில் அளித்த நேர்காணலில் அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்