அப்போ ’அண்ணாத்த ஆடுறார்’… இப்போ ’வாத்தி கம்மிங்’ – டிக்டாக்கில் வைரலாகும் வீடியோ!

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (07:49 IST)
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அஸ்வின் அவரது மாஸ்டர் பட பாடலுக்கு நடனமாடி டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார்.

துருவங்கள் 16 என்ற படத்தில் நடித்த அஸ்வின் குமார் டிரெட் மில்லில் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு நடனமாடும் ஒரு வீடியோ கடந்த வாரம் வைரல் ஆனது. பலரும் அவரின் வீடியோவை பார்க்க வைரலான வீடியோ கமலே அந்த வீடியோவைப் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் இப்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ட்ரெட்மில்லில் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இப்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவ, விஜய் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்