இயக்குனர் ஆகும் யுட்யூப் பிரபலம் அபிஷேக் ராஜா!

vinoth

திங்கள், 19 பிப்ரவரி 2024 (08:04 IST)
யுட்யூபில் ஓப்பன் பண்ணா என்ற சேனல் மூலம் தொடர்ந்து சினிமா விமர்சனங்களை செய்து வருகிறார் அபிஷேக் ராஜா. இவர் திரை பிரபலங்களை எடுக்கும் நேர்காணல்கள் இணையத்தில் வெகுபிரபலம்.

இதையடுத்து அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். அங்கு அவர் நடந்துகொண்ட விதம் சர்ச்சைகளையும் அவர் மேல் விமர்சனங்களையும் பெற்றார்.

இந்நிலையில் இப்போது அபிஷேக் புதிதாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை ஆக்ஸஸ் பிலிம்ஸ் டில்லி பாபு தயாரிக்கிறார். இந்த படத்துக்கு முன்னணி ஒளிப்பதிவாளரான தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளாராம்.

காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்துக்கு ‘ஜாம் ஜாம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். காதல் சார்ந்த ஒரு த்ரில்லர் படமாக ஜாம் ஜாம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்