ஏபிசி டாக்கீஸ் சாக்ஷி அகர்வாலை புதிய ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், நிறுவனத்தின் பிராந்திய விளம்பரத் தூதராகவும் நியமித்துள்ளது!

J.Durai
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (13:07 IST)
சுயாதீன திரைப்பட இயக்குனர்களுக்கு ஆதரவளிக்கும் வெளிப்படையாக அணுகக் கூடிய ஓடிடி (OTT) திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசி டாக்கீஸ், முன்னணி நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வாலை தனது ஆலோசனைக் குழுவில் இணைத்துக் கொண்டதாக அறிவித்துள்ளது.
 
இதற்கு மேலாக, சாக்ஷி அகர்வால் பிராந்திய விளம்பரத் தூதராகவும் செயல்படுவார், இளம் திறமைகளை ஆதரிக்க ஏபிசி டாக்கீஸ் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல் படுவதை மேலும் வலுப்படுத்துவார். என
தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வால், பல்வேறு திறமைகளைக் கொண்டவர். 
 
அவர் ஆலோசனைக் குழுவில் இணைந்தது, சினிமாவில் படைப்பாற்றல் மற்றும் புதுமையை ஊக்குவிக்க ஏபிசி டாக்கீஸ் முன்னணி தொழில்முனைவோர்களுடன் இணைந்து செயல்படுவார் எனவும் புதிய திரைப்பட இயக்குனர்களை தங்களுடைய படைப்புகளை ஏபிசி டாக்கீஸில் காட்சியிட ஊக்குவிப்பார் என்று அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்