சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் விரைவில் வெள்ளித் திரையில்......

J.Durai
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (12:37 IST)
சமீபகாலமாக தமிழ் சினிமா சந்தித்திருக்கும் மாபெரும் ஒரு சவால்தான் OTT மற்றும் SATELLITE வியாபாரம். 
 
கடந்த வருடங்கள் போல் இல்லாமல் மிகக் கடினமான சூழ்நிலையில் தமிழ்த் திரைப்படங்கள் இந்த வியாபாரத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பிறகே OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம் முடிவாகும் என்ற சூழல் இப்போது உருவாகியுள்ளது. இந்த காலக் கட்டத்தில் திரைக்கு வரும் முன்னரே திரு.மாணிக்கம் திரைப்படத்தை பார்த்து இதயம் கரைந்து  இந்தப் படம் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற படமாகவும் மனதை நெகிழவைக்கும் படமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து ஜீ தமிழ் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் OTT மற்றும் SATELLITE உரிமையை வாங்கி உலகமெங்கும் வெளியிட உள்ளது.
 
மிக விரைவில் வெள்ளித் திரைக்கு வரவிருக்கிற                    திரு.மாணிக்கம் படத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, நாசர்,  தம்பி ராமையா, இளவரசு, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், சாம்ஸ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
 
சீதாராமம் பட புகழ் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
 
இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை அப்படியே பதிவு செய்து கண்ணுக்கு விருந்தளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.
 
விறுவிறுப்பான திரைக்கதையில் இயக்குனர் நந்தா பெரியசாமி திரு.மாணிக்கம் திரைப்படத்தை இயக்கியுள்ளர். 
 
ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்