வாத்தி கம்மிங் பாடலுக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ஆரி - வீடியோ!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (16:28 IST)
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஆரி நேர்மையாக விளையாடி மக்கள் மனதை வென்று முதல் இடத்தை பிடித்து டைட்டில் வென்றார். இதில் 16.5 கோடி வாக்குகள் பெற்ற ஆரி பாலாவை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார்.
 
அவரது வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இதையடுத்து ஆரி புதிய படங்களில் கம்மிட்டாகியுள்ளார். இந்நிலையில் தற்ப்போது விஜய் டிவியில் ஒளிர்ப்பாகும் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர். 
 
அப்போது ஆரிக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த அந்த டிவி நிறுவனம் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு புல்லட் பைக்கில் வந்து மாஸ் காட்டி நடனமாடிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்