5 தமிழ்ப் படங்கள்… ஒரு பிறமொழிப் படம்… நாளை ரிலீஸாகும் 6 படங்கள்!

vinoth

வியாழன், 29 மே 2025 (09:34 IST)
தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டுக்குத் தோராயமாக 250 படங்கள் ரிலீஸாகின்றன. அதில் 20 படங்கள் கூட வணிக ரீதியாக வெற்றிப் பெறவில்லை என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் தவிர சிறு பட்ஜெட் படங்களுக்குப் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில்லை என்று தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.

இப்படி 10 சதவீதம்தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றாலும் ஆண்டுக்கு ஆண்டு ரிலீஸாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் செல்கிறது. பழையத் தயாரிப்பாளர்கள் சினிமாவை விட்டு வெளியேறுவதும், புதியவர்கள் வந்து ஒரு படம் தயாரித்து விட்டு வெளியேறுவதும் என ஒரு சூதாட்டம்தான் நடந்து வருகிறது.

இந்த வகையில் இந்த வார ரிலீஸாக பிறமொழிப் படம் உள்ளிட்ட 6 படங்கள் ரிலீஸாகின்றன. இதில் ஜாக்கி சான் நடித்துள்ள ‘தி கராத்தே கிட்’  படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ் நாட்டிலும் கணிசமான திரையரங்குகளில் இதன் டப்பிங் வெர்ஷன் ரிலீஸாகவுள்ளது.  இந்த படத்தோடு 5 சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸாகின்றன. ஜின்,  தி வெர்டிக்,  மனிதர்கள்,  ராஜபுத்திரன் மற்றும் ஆண்டவன் ஆகிய ஐந்து படங்களும் நாளை ரிலீஸாகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்