சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதால், அந்த படத்தின் முக்கிய காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்றும், அதனால் அந்த படம் தோல்வி அடைந்ததாகவும் கூறப்பட்டது.
மும்பையில் உள்ள ஒரு கிராபிக்ஸ் நிறுவனத்திலிருந்து தான் இந்த ஹார்ட் டிஸ்க் கொரியர் மூலம் அனுப்பப்பட்டதாகவும், இந்த கொரியரை ரகு என்பவர் பெற்று, அதை சரிதா என்ற பெண்ணிடம் கொடுத்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன. ஆனால் தற்போது ரகு, சரிதா ஆகிய இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
திட்டமிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் தான் யாரோ ஹார்ட் டிஸ்க்கை திருடிச் சென்றுள்ளனர் என்று படக்குழுவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.