விடாமுயற்சியை விட 10 மடங்கு மாஸ்! விக்ஸ், ஹால்ஸ் வாங்கிட்டு போங்க! - குட் பேட் அக்லி ஸ்டண்ட் மாஸ்டர் கொடுத்த அப்டேட்!

Prasanth Karthick

திங்கள், 10 பிப்ரவரி 2025 (10:32 IST)

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான அஜித்குமாருக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். எனினும் அவர் தற்போது கார் ரேஸ், பைக் ட்ரெக்கிங் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் குறைவாகவே படங்களை நடித்து வருகிறார். இதனால் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அஜித் படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் அதற்காக காத்திருப்பதும், அப்டேட் கேட்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

 

இந்நிலையில்தான் இந்த ஆண்டில் அஜித்குமாரின் 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. தற்போது விடாமுயற்சி வெளியாகி ஓடி வரும் நிலையில் குட் பேட் அக்லி ஏப்ரல் 10 வெளியாக உள்ளது. விடாமுயற்சியில் அதிகமான மாஸ் ஆக்‌ஷன் சீன்கள் இல்லை என அஜித் ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

 

இந்நிலையில் ரசிகர்கள் மகிழும்படியாக அப்டேட் கொடுத்துள்ள குட் பேட் அக்லி படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் “விடாமுயற்சி படம் அஜித் படம்போல இல்லை, மாஸ் சீன்கள் இல்லை என ரசிகர்கள் வருந்துகின்றனர். இந்த படத்தில் எதையெல்லாம் மிஸ் செய்தார்களோ அதைவிட 10 மடங்கு அதிகமான ஸ்டண்ட் காட்சிகள் குட் பேட் அக்லியில் இருக்கும்.

 

குட் பேட் அக்லி படத்திற்கு செல்லும்போது விக்ஸ், ஹால்ஸ் வாங்கிக் கொண்டு போங்க. நீங்கள் கத்தி கத்தி உங்களுக்கு தொண்டை வலி வந்துவிடும்” என அவர் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்