இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். இது சம்மந்தமாக ரஹ்மான் மீது சில அவதூறுகள் வீசப்பட்டன. அதன் காரணமாக அவர் சினிமாவில் இருந்து ஒரு சிறு இடைவெளியை எடுத்துக்கொண்டு தற்போது மீண்டும் தக்லைஃப் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவரளித்த நேர்காணலில் தன்னை பெரிய பாய் என்று அழைப்பது சம்மந்தமாக நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார். அந்த நேர்காணலில் தொகுப்பாளினி ரஹ்மானை பெரிய பாய் என்று அழைக்க, அதற்கு “அந்த பெயர் வேண்டாம். எனக்குப் பிடிக்கல. நான் என்ன கசாப்புக் கடையா வச்சிருக்கேன்” என ஜாலியாகப் பேசியுள்ளார்.