ஓப்பன்ஹெய்மரை விட ராக்கெட்ரிதான் எனக்கு பிடித்திருந்தது… ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (07:53 IST)
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடித்த 'ராக்கெட்டரி' என்ற படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் இருந்தார். இந்நிலையில் 69 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த படமாக ராக்கெட்ரி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்போது அந்த படத்துக்கும் இயக்குனர் மாதவனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் ராக்கெட்ரி படத்தைப் பாராட்டும் போது “வாழ்த்துகள் மாதவன். ராக்கெட்ரி படம் பார்த்த போது அது எனக்கு ஏற்படுத்திய தாக்கம் இப்போதும் நினைவிருக்கிறது. எனக்கு ஓப்பன்ஹெய்மரை விட ராக்கெட்ரி மிகவும் பிடித்திருந்தது.” எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான  கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன் ஹெய்மர் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள நிலையில்  அந்த படத்தோடு ராக்கெட்ரியை ஒப்பிட்டு இருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்