விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சமபந்தி விருந்து

திங்கள், 18 செப்டம்பர் 2023 (17:58 IST)
இன்று தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று தன் சமூகவலைதள பக்கத்தில்,

‘’சகோதரத்துவம், சமத்துவம், நல்லிணக்கம் பேணுவதில் முன்னோடியாக இருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் இத்திருநாளில் மக்களிடையே அமைதியும், மகிழ்ச்சியும் தொடர வாழ்த்துகள் என்று விஜய் கூறியதாக பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னை சோழிங்க நல்லூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 500 பேருக்கு சமபந்தி விருத்து வழங்கப்பட்டது.

இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்