காதல் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

திங்கள், 18 செப்டம்பர் 2023 (18:34 IST)
சென்னை ஆவடியில்  காதலித்து திருமணம் செய்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி- அம்பத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர் ஜான்சன். இவரது மனைவி சாரம்மாள். இவர்கள் கடந்த  ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், சாரம்மாள் முதலில் திருமணமானதை மறைத்து, ஜான்சனை திருமணம் செய்தது, அவருக்கு தெரியவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

பின்னர், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் தெரிகிறது.  நேற்று முன்தினம் சாரம்மாளை கொலை செய்த ஜான்சன், அவரது உடலை கோணிப்பையில் சுற்றி வைத்து போலீஸில் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்