இயக்குனர் ஏ எல் விஜய் தனது அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் ஏ எல் விஜய் இரண்டு ஆண்டுகளாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலிஸுக்கு தயாராக இருந்த போது கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் விஜய் இப்போது அக்டோபர் 31 லேடீஸ் நைட் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளாராம். இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஆகிய நான்கு பேரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.