இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்படும் ட்ரம்ப்பின் பேஸ்புக் அக்கவுண்ட்!

சனி, 5 ஜூன் 2021 (09:07 IST)
அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் அக்கவுண்ட் 2 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். ஆனால் தோல்வியை ஏற்க மறுத்த அவரின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். அந்த கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அந்த கலவரத்தை தூண்டும் விதமாக ட்ரம்ப் வெளியிட்ட முகநூல் பதிவு குறித்து முகநூல் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. இப்போது ட்ரம்ப் கலவரத்தை தூண்டியது உண்மைதான் என அறிவித்து அவரின் கணக்கை 2023 ஆம் ஆண்டு வரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்