தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் மற்றும் திரிஷா என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில், விஜய்யின் லியோ திரைப்பட டிரைலர் வெளியாகி இணையதளங்கில் டிரெண்டிங்கிங் ஆனது. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் நா ரெடிதான், 2 வது சிங்கில் படாஸுதான் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் 3 வது சிங்கில் அன்பெனும் என்ற லிரிக் வீடியோ நேற்று மாலை ரிலீஸானது.
இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் லோதிகா இருவரும் பாடியுள்ளார். விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. வெளியான 20 நிமிடங்களில் இப்பாடல் பல லட்சம் பார்வையாளர்களை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது.
இந்த நிலையில், லியோ படம் ஐமேக்ஸ் தொழில் நுட்பத்தில் வெளியிடவுள்ளதாக 7 ஸ்கிரீன் நிறுவனம் இன்று தன் சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பொன்னியின் செல்வன், ஓப்பன்ஹைமர் உள்ளிட்ட படங்கள் ஐ மேக்ஸ் தொழில் நுட்பத்தில் ரிலீஸாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் லியோ படத்தை ஐமேக்ஸ் தொழில் நுட்பத்தில் திரையில் காண புதிய அனுபத்தை பெற ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Get ready for an explosive cinematic blast, theres no holding back