ரூ.190 கோடி பங்களா வாங்கிய பிரபல நடிகை

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (14:27 IST)
பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தேலா மும்பையில் ரூ.190 கோடியில் பிரமாண்ட பங்களா வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு சிங் ஆப் தி கிரெட் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக ஊர்வசி ரவுத்தேலா. அதன்பின்னர், பாஜ் ஜானி, காபில், பகல்பந்தி, வால்டேட் வீரய்யா, முகவர், லெஜண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவுத்தேலா தற்போது மும்பை மையப்பகுதியில்  பிரமாண்டமான ஒரு பங்களாவை  வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த பங்களாவின்  மதிப்பு ரூ.190 கோடி என்று கூறப்படுகிறது. இந்த பங்களாவைச் சுற்றி  அழகிய தோட்டம், நீச்சல் குளம், யோகா மையம், உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகள் உள்ளன.

கடந்த 6 மாதமாக மும்பையின் பிரபலமான இடத்தில் வீட்டு வாங்க வேண்டுமென்று தேடி வந்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா, பிரபல தயாரிபாளர் யாஷ் சோப்ராவின் வீட்டிற்கு அருகில் இந்த வீட்டை வாங்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்