ஒரு படத்தில் 9 முன்னணி ஹிரோயின்கள்: அந்த அதிஷ்டகார ஹீரோ யார் தெரியுமா?

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (16:31 IST)
தெலுங்கு சினிமாவில்தான் பெரும்பாலும் ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பார். தற்போது இந்த டிரெண்ட் தமிழிலும் வந்துள்ளது. இரண்டு மட்டுமல்ல தற்போது 3 ஹிரோயின்கள் கூட ஒரு படத்தில் நடிக்கிறார்கள்.
 
ஆனால், இரண்டு ஹீரோயின்களை ஒரு படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்றாலே இயக்குனரின் பாடு திண்டாட்டம்தான். ஏனெனில் அவர்களுக்கு மத்தியில் ஈகோ ஏற்படக்கூடும். 
 
இப்போது இதையெல்லாம் மீறி ஒரு படத்தில் 9 ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர். அதுவும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள். ஆம், மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் படத்தில்தான் 9 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். 
என்.டி.ராமராவ் படங்களில் நடித்தபோது அவருடன் அல நடிகைகள் நடித்துள்ளனர். எனவே, இந்த படத்தில் வித்யாபாலன், ரகுல் ப்ரீத் சிங், நித்யா மேனன், அனுஷ்கா, ஷாலினி பாண்டே, பாயல் ராஜ்புத், ஹன்சிகா, மாளவிகா நாயர், மஞ்சிமா மோகன் என 9 நாயகிகள் ஒப்பந்தமாகி உள்ளனர். 
 
மேலும் என்.டி.ராமராவ் வேடத்தில் என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கிறார். இவருக்காகதான் இத்தனை ஹீரோயின்கள். அதோடு, சந்திரபாபுநாயுடு கதாபாத்திரத்தில் ராணா நடிக்கிறார். அவரது மனைவியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்