மூடப்படும் ஈபிள் டவர்: காரணம் என்ன?

வெள்ளி, 7 டிசம்பர் 2018 (17:03 IST)
பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான மஞ்சள் ஜாக்கெட் என்னும் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சத்தால் நாளை (டிசம்பர் 8) ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. 
மக்களின் வன்முறை போராட்டத்துக்கு காரணமான எரிபொருள் உயர்வை திரும்ப பெறுவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக அறிவித்துவிட்டாலும், அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக மக்களின் போராட்டம் தொடர்கிறது.
 
இதனால், பிரான்ஸ் முழுவதும் 89,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தலைநகர் பாரீஸில் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
 
மேலும், பாரீஸின் சேம்ப்ஸ்-எலைசீஸ் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களை மூடுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். சில அருங்காட்சியகங்களும் மூடப்படும்.
 
கடந்த பல காலத்தில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான வன்முறையாக இது கருதப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்