லியோ படத்தில் பணியாற்றிய 7 இயக்குனர்கள்!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (09:34 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி இப்போது சென்னையில் இறுதிகட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ்.

விஜய் சம்மந்தமானக் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் மொத்த ஷூட்டிங்கும் முடிந்து படம் அக்டோபர் 19 ஆம் தேதியில் ரிலீஸ் ஆகவுள்ளது.

லியோ திரைப்படம் ஒரு மல்டிஸ்டார் திரைப்படமாக உருவாகிவரும் நிலையில் படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. படத்தில் ஏழு இயக்குனர்களை பணியாற்ற வைத்துள்ளார் லோகேஷ். கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன் மற்றும் அனுராக் காஷ்யப் என் ஏழு இயக்குனர்கள் நடிகர்களாக பணியாற்றியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் லோகேஷின் நண்பர்களான தீரஜ் வைத்தி மற்றும் ரத்தினகுமார் ஆகியொர் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்றியுள்ளனர். இப்படி மொத்தம் 7 இயக்குனர்கள் லியோ படத்தில் பணியாற்றியுள்ளனர். இதற்கிடையில் தனுஷ் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. அது உண்மையாகும் பட்சத்தில் அவரையும் சேர்த்து மொத்தம்  8 இயக்குனர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்