ஆஸ்கர் விருது வென்ற நடிகர் மீது 4 ஆண்கள் பாலியல் வழக்கு.... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சனி, 29 ஜூலை 2023 (17:37 IST)
ஆஸ்கர் விருது வென்ற  பிரபல நடிகர் கெவின் ஸ்பேசி மீது 4 ஆண்கள்  அனுமதியின்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

ஹாலிவுட் சினிமாவைச் சேர்ந்த பிரபல நடிகர் கெவின் ஸ்பேசி. இவர்,  டேட், ஒர்க்கிங் கேள், யூசுவல், சஸ்பெக்ட்ஸ் ஸ்விம்மிங், வித் ஷார்க்கஸ், செவன், பியூட்டி, பேபி டிரைவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு அமெரிக்கன் பியூட்டி என்ற படத்தில் நடித்தற்காக இவர், சிறந்த  நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.

இந்த  நிலையில் கெவின் ஸ்பேசி மீது 4 ஆண்கள் அனுமதி இன்றி தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குத் தொடர்ந்தனர்.  இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்.  இக்குற்றச்சாட்டை ஸ்பேசி மறுத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கெவி  ஸ்பேசி மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரமில்லை என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இவர் மீது மொத்தம் 9 வழக்குகள் தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்