இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரது கட்சியினர் பெரிய அளவில் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.