அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கையில் உள்ள காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 22 ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும், இலங்கை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.