அதிக வசூல் செய்த முதல் மலையாள படம்! எவ்வளவு தெரியுமா? – வசூல் சாதனையில் ‘2018’!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2023 (09:46 IST)
மலையாளத்தில் டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து சமீபத்தில் வெளியான ‘2018’ படம் உலகளவில் அதிகம் வசூலித்த முதல் மலையாள படம் என்ற சாதனையை படைத்துள்ளது.



மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, கலையரசன், ஆசிப் அலி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘2018’. கேரளாவில் 2018ம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரும் மழை, வெள்ளப்பெருக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் வெளியான இந்த படம் சமீபத்தில் ஓடிடியிலும் வெளியானது. ஓடிடியில் வெளியான பின்பும் கேரளாவில் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

மலையாள திரைப்படங்கள் வசூலில் ரூ.100 கோடியை தொடுவதே பெரும் இலக்காக உள்ள நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலை தொட்டு மலையாள திரைப்படங்களிலேயே அதிகம் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்