`2.O' படக்குழு ரசிகர்களுக்கு அளிக்கும் 3டி சிறப்பு விருந்து: அக்‌ஷய் குமார் தகவல்

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (11:01 IST)
லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.O'. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படக்குழு ரசிகர்களுக்கு நாளை 3டி சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.

 
ரூ.400 கோடி செலவில் உருவாகி வரும் `2.O' படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இதனை உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், 3டி-யில் மேக்கிங் வீடியோ ஒன்று நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள். இதனை இப்படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். `2.0' படத்தின் இசை வெளியீடு அக்டோபரிலும், டீசர் நவம்பரிலும், டிரைலர் டிசம்பரிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இப்படம் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்