’’12 கிலோ எடைகுறைவு...8 நாளில் ஹூட்டிங் முடிந்தது -’’ முன்னணி நடிகர் ’’ஓபன் டாக்’’

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (21:39 IST)
சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிப் நல்ல விமர்சனத்துடன்  ஓடிக் கொண்டிருக்கும் படம் ஆந்தாலஜி வகைப் படமான பாவக்கதைகளில் ஒன்றான தங்கம். இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் காளிதாஸ் பெண் தன்மை கொண்டவராக நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க 12 கிலோ எடை குறைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிப் நல்ல விமர்சனத்துடன்  ஓடிக் கொண்டிருக்கும் படம் ஆந்தாலஜி வகைப் படமான பாவக்கதைகள். இவற்றை வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இயக்கி வருகின்றனர்.

இதில் சுதா கொங்கரா இயக்கத்தி உருவாகியுள்ள படம் தங்கம். இப்படத்தில்  காளிதாஸ், சாந்தனு,  உள்ளிட்டோர் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றனர். குறிப்பாக காளிதாஸ், பெண் தன்மை கொண்டவராக நடித்துள்ளார்.

இக்கதாப்பாத்திரத்திற்காக காளிதாஸ் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் 12 கிலோ எடை குறைத்துள்ளதாகவும் தனது காட்சிகள் 8 நாட்களில் படமாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்