6 மாதத்தில் 110 படங்கள் ரிலீஸ்....இதில், 10 மட்டுமே நல்ல படங்கள்- புளூ சட்டை மாறன் டுவீட்

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (20:52 IST)
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் சில படங்கள் மட்டும்தான்   நல்ல படங்களின் பட்டியலில் இடம்  பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் வருடம் தோறும் அதிகளவில் திரைப்படங்கள் வெளியாகி வருகினனர். இந்த வருடம் பாதி ஆண்டு நிறைவடைந்துள்ள  நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு, பொன்னியின் செல்வன் 2 ஆகிய பெரிய படங்கள் வெளியானது.

அதன்பிறகு, தி கிரேட் இந்தியன் கிச்சன், டக்கர், பிச்சைக்காரன்,  விடுதலை, யாதும் ஊரே யாவரும் கேளீர் , தாதா, அயோத்தி, போர் தொழில், குட் நைட், தீராக் காதல், அயலி வெல் சீரிஸ் உள்ளிட்ட பல 110  க்கும் மேற்பட்ட படங்கள்  வெளியானது.

இதில்,  நல்ல படங்கள் என்று ஒரு பட்டியலை பிரபல சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், டாடா, அயோத்தி, விடுதலை, போர் தொழில் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், சராசரி விமர்சனம் பெற்ற படங்கள் என்று, அயலி வெப் சீரிஸ், கொன்றால் பாவம், யாத்திசை, ஃபர்ஹானா, குட் நைட், தீராக் காதல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் குறிப்பிட்டுள்ள பட்டியலுக்கு ரசிகர்கள் விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்