''சம்பள மோசடி...ஹிருத்திக் ரோசன் படத்தில் ஏமாற்றம்''.. சினிமாவில் இருந்து விலகிய நடிகர்

வெள்ளி, 30 ஜூன் 2023 (15:09 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ரஜத் சினிமாவை விட்டு விலகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர்  நடிகர் ரஜத் பேடி. இவர், ஹிருத்திக் ரோசனின் கோயி மில் கயா என்ற இந்திப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில்,  நடிகர் ரஜத் பேடி சினிமாவில் தனக்கு சம்பள மோசடி நடந்ததால் சினிமாவை விட்டு விலகியுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:  ‘’ஹிருத்திக் ரோசனின் கோயி மில் கயா படத்தில் வில்லனாக நடித்திருந்தேன். ஹீரோவுக்கு இணையான கதாப்பாத்திரம்.  படம் முடிந்தபின், அப்படத்தில் இருந்து  நான் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டனர். இதனால் ஏமாற்றம் அடைந்தேன். சன்னி தியோலுடன் ஒரு படத்தில் நடித்தேன். சம்பளத்தை காசோலையாக தந்தனர்.. அதை வங்கியில் செலுத்தியபோது, பணமின்றி திரும்பி வந்தது. இதற்காக நீதிமன்றம் சென்று போராட்டம் நடத்துவதா? என்று என்னை  நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து, சினிமாவை விட்டு விலகுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்