நான் 10ம் வகுப்பு படித்த போது கமல் என்னை... நடிகை ரேகாவின் அதிர்ச்சி பேட்டி!

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (17:54 IST)
பாரதிராஜா இயக்கத்தில் 1986ம் ஆண்டில் வெளியான கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரேகா. அந்த படத்தில் ஜெனிபர் என்ற டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். முதல் படமே புகழின் உச்சத்தில் நிறுத்தியது. 
 
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திலே கே. பாசந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்நிலையில் நடிகை ரேகா சமீபத்தில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் இது குறித்து கேள்வி கேட்டபோது, " புன்னகை மன்னன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் என்னிடம் சொல்லமலே, என் அனுமதியின்றி கமல் முத்தம் கொடுத்துவிட்டார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
இது குறித்து மேலும் பேசிய நடிகை ரேகா, கிளைமாக்ஸ் காட்சியின் ஷூட்டிங் போது " மலை உச்சியில் நின்று 123 என சொல்லி முடித்து குதிப்பதற்குள் கமல் என்னை பிடித்து முத்தம் கொடுத்துவிட்டார். எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் என் அப்பா இதனை ஒப்புக்கொள்ளமாட்டார் என இயக்குனர் பாலசந்தரிடம் கூறியபோது இது ஒன்றும் அசிங்கமாக தெரியாது காதலின் வெளிப்பாடாக தான் இருக்கும் என்றார். பின்னர் என் அம்மாவிடம் சொல்லி புலம்பினேன். அதையடுத்து படம் வெளியானபோது அந்த ஒரு காட்சியை பார்த்து தியேட்டரில் இருந்த அனைவரும் துக்கத்தில் கத்தினார்கள். இந்த உண்மையை கூறுவதால் கமல் என்மீது கோபப்படலாம் இருந்தாலும் உண்மையை சொல்லவேண்டுமல்லவா என கூறினார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்