ஓய்வை அறிவித்த இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (08:44 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யூசுப் பதான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக டி 20 போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் பல வெற்றிகளை குவித்தவர் யூசுப் பதான். இர்பான் பதானின் சகோதரரான இவர் தனது அதிரடி ஆட்டத்துக்காக பிரபலமானவர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக விளையாடி மூன்று முறை கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில் நேற்று அவர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். யூசுப் பதான் 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 810 ரன்களைச் சேர்த்துள்ளார். 2 சதங்கள், 3 அரை சதங்களை அடித்துள்ளார். அதே போல 22 டி20 போட்டிகளில் விளையாடிய பதான், 236 ரன்கள் சேர்த்துள்ளார். நீண்ட காலமாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்த அவர் ஐபிஎல் தொடரிலும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது ஓய்வை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்