ஆடாம ஜெயிச்சோமடா… முதலிடத்தில் ஜோகோவிச்! – டென்னிஸ் தரவரிசை பட்டியல்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:43 IST)
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து முடிந்த நிலையில் உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மௌனம் வெளியிட்டுள்ளது.

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மௌனம் நேற்று வெளியிட்டது. விசா பிரச்சினை காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போன நிலையிலும் செர்பிய டென்னிஸ் வீரர் நோவா ஜோகோவிச் 11,015 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இறுதிவரை சென்று தோல்வியடைந்த ரஷ்ய வீரர் டெனில் மெட்விடேவ் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றதன் மூலம் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்தவரான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்