வங்கதேசத்திற்கு எதிரான போட்டி.. மேக்ஸ்வெல்லுக்கு ரெஸ்ட் கொடுத்த ஆஸ்திரேலியா..!

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (10:51 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று  வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. 
 
இதனை அடுத்து வங்கதேச அணி தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில் நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
வங்கதேசத்தை பொருத்தவரை இன்று மூன்று வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ரகுமான், ஹசன் மற்றும் அகமத் ஆகிய மூன்று பேர் அணியில் இணைந்துள்ளனர். 
 
அதேபோல் ஆஸ்திரேலியாவில் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டார்க் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 வங்கதேசம் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி வரும் வாய்ப்பை இழந்து விட்டதால் இந்த போட்டி முக்கியத்துவம் இல்லாத போட்டியாக கருதப்படுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்