உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியாவின் இரண்டாவது ஆட்டத்தின் முடிவு என்ன?

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (08:07 IST)
உலக கோப்பை ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் டிரா செய்துள்ளது.. 
 
நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்த போது இரு அணி வீரர்களும் போல் அடிக்க தீவிர முயற்சி செய்தனர்.
 
ஆனால் ஆட்டநேர இறுதி வரை இரு அணிகளும் போல் எதுவும் அடிக்கவில்லை என்பதால் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. 
 
இந்த போட்டி டிராவில் முடிந்தாலும் கோல்கள் அடிப்படையில் இங்கிலாந்து அணியை விட இந்தியா முன்னிலையில் இருப்பதால் டி பிரிவில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி வேல்ஸ் அணியை இந்தியா சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்