உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: இன்று 6வது நாளும் போட்டி!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (06:59 IST)
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று ஐந்தாவது நாளில் முடிவடைந்தது. ஆனால் இந்த போட்டியில் இரண்டு நாள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்றும் 6வது நாளாக ஆட்டம் தொடர உள்ளது
 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் விதிப்படி மழை காரணமாக ஆட்டம் தடைபட்டால் ரிசர்வ் டே என ஒரு நாள் அதிகமாக விளையாட அனுமதிக்கப்படும். இந்த ரிசர்வ் டே ஆட்டமான இன்றைய ஆட்டத்திலும் முடிவு தெரியாவிட்டால் தான் போட்டி டிராவில் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று ஐந்தாவது நாளில் நியூசிலாந்து அணி 249 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து இந்தியா தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் 67 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது/ ரோகித் சர்மா 30 ரன்களிலும் சுபன்கில்  8 ரன்களிலும் அவுட் ஆகினர். ஆனால் புஜாரே மற்றும் விராட் கோலி  ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய தினம் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தால் இந்த போட்டியின் முடிவு தெரியும் என்பதும் இன்றும் முடிவு தெரியவில்லை என்றால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்