இந்தியாவில் 22 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று - மத்திய அரசு

செவ்வாய், 22 ஜூன் 2021 (18:21 IST)
தற்போது இந்தியாவில் 22 பேர் இந்த வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர் என மத்திய அரசு உறுதி செய்துள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரண்டாம் அலை கொரோனா அதிகளவில் பரவ இந்தியாவில் உறுமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸே காரணம் என வல்லுனர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
 
இந்நிலையில் தமிழகத்தில் 554 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 386 பேருக்கு டெல்டா கொரோனா வைரஸ் பரவியது தெரிய வந்துள்ளது. மொத்த பரிசோதனையில் இது 75%க்கும் அதிகம் என்றும், இதில் அதிகம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
 
இதனிடையே டெல்டாவில் இருந்து டெல்டா பிளஸ் வைரஸ் உருமாறியுள்ளது. இந்த வைரஸ் உலக நாடுகளில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் 22 பேர் இந்த வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். ஆம், மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என மத்திய அரசு உறுதி செய்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்