ஐந்தாம் நாளும் மழையால் பாதிப்பு… வெறுத்துப் போன ரசிகர்கள்!

செவ்வாய், 22 ஜூன் 2021 (15:43 IST)
சவுத்தாம்ப்டனில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 5 ஆம் நாளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மழை காரணமாக இதுவரை இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் போட்டி நடந்த இரண்டு நாட்கள் கூட மழையால் ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்தது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் போட்டி தொடங்குவதும் இப்போது மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியில் வெற்றி தோல்வி ஏற்பட வாய்ப்பே இல்லை எனும் நிலையில் டிரா ஆகதான் வாய்ப்பு என்ற சூழல் உருவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்