சமீபத்தில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த குகேஷை மற்றொரு தமிழகத்தை செஸ் வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெதர்லாந்து நாட்டில் டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடர் நடந்து வரும் நிலையில் இதன் மாஸ்டர் பிரிவின் 12 வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா செர்பியாவின் அலெக்சி சரணாவுடன் மோதி வெற்றி பெற்றார்.
அதே போல் மற்றொரு தமிழக வீரரான நடப்பு உலக சாம்பியன் குகேஷ், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்ட் என்பவருடன் மோதிய நிலையில் இந்த போட்டி 'டிரா' ஆனது.
இந்த நிலையில் 12 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகிய தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை இடத்தை பிடித்தனர். இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்ட நிலையில் அதில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதால் அவர் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.